
சென்னை: தமிழகத்தில் ஒரே கட்டமாக மே 16ம் தேதி வாக்கு பதிவு நடக்கிறது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. எனவே, புதிய திட்டங்களை அறிவிக்கவோ அல்லது செயல்படுத்தவோ முடியாது. இந்நிலையில் தாம்பரம் மற்றும் ஆலந்தூர் மண்டல உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலகத்தில், ரேஷன் கார்டில் பெயர் நீக்குதல், சேர்த்தல் மற்றும் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பங்கள் பெறப்படாமல் அலைக்கழிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். ஆனால், தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், விண்ணப்பங்கள் பெற முடியாது என அதிகாரிகள் ...