
சென்னை : சென்னை எழிலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் தலைமை செயலகத்தை முற்றுகையிட முயற்சி மேற்கொண்டுள்ளனர். அவர்களை முனேற விடாமல் காவல் துறையினர் தடைகளை ஏற்படுத்தி தடுத்து வாகனங்களில் ஏற்றி வருவதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தலைமையில் 68 துறை ஊழியர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது போராட்டம் 7 வது நாளாக நீடித்து இருப்பதால் அரசு நிர்வாகம் அடியோடு ஸ்தம்பித்து இருக்கிறது. இன்றைய போராட்டத்தில் தமிழ்நாடு முதுகலை ...