
சென்னை: சார்பு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் பிடிவாரண்டுகள் தொடர்பாக செஷன்ஸ் நீதிபதி தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடந்தது.சென்னை மாநகரத்திற்கு உட்பட்ட இடங்களில் நடைபெறும் கிரிமினல் வழக்குகள் செஷன்ஸ் நீதிமன்றங்கள் மற்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் நடந்து வருகின்றன. இந்த வழக்குகளில் பலருக்கு பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவற்றை போலீசார் அமல்படுத்தாமல் உள்ளனர். மேலும், சாட்சி விசாரணைக்கு போலீஸ் தரப்பில் ஆஜராவதும் குறைந்து வருகிறது. பந்தோபஸ்து போன்ற பணிச்சுமைகள் காரணமாக நீதிமன்றங்களில் நடைபெறும் ...