
பெரம்பூர்: கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்தவர் லட்சுமணன் (30). இவரது மனைவி கவிதா (26). கடந்த 12ம் தேதி கவிதா திடீரென தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள், அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, கவிதா எழுதிய கடிதம் சிக்கியது. அதில், ‘கொடுங்கையூர் கண்ணதாசன் நகரை சேர்ந்த சரவணன் (35) என்பவர், போனில் ஆபாசமாக பேசி வருகிறார். இதில் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றேன்,’ என கூறப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து, ...