
திருவொற்றியூர்: மாதவரம் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 13 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மாதவரம், பொன்னியம்மன் கோயில் அருகே ஜிஎன்டி சாலையில் தேர்தல் பறக்கும் படையை சேர்ந்த தனி வட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் நேற்று முன் தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மாதவரம் மேம்பாலத்தில் இருந்து மூலக்கடை வழியாக வந்த ஒரு மினி லாரியை போலீசார் மடக்கினர். மினி லாரிக்குள் போலீசார் சோதனை செய்தபோது, ஒரு பையில் 13.10 லட்சம் ரூபாய் இருந்ததை கண்டுபிடித்தனர். ஆனால், அதற்குரிய ஆவணங்கள் எதுவும் ...