
* போடாத ரோடுக்கு பில் பாஸ் * அதிகாரிகள் ஒத்துழைப்புடன் அமைச்சர்கள் சுருட்டல்சென்னை : மழையால் சேதமடைந்த குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க ஒதுக்கப்பட்ட ரூ.150 கோடி நிதியில் ரூ.50 கோடி வரை முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரை பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேசிய, மாநில, மாவட்ட முக்கிய சாலைகள் கடுமையாக சேதம் அடைந்தது. இது குறித்து நடந்த ஆய்வில் மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்து 680 கி.மீ சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பது கண்டறியப்பட்டது. ...