
சென்னை : பக்தர்கள் மூலம் கிடைக்கும் காணிக்கை பணத்தை முறைகேடாக பயன்படுத்தி கபாலீஸ்வரர் கோயில் நிர்வாக அதிகாரி ரூ.15 லட்சத்தில் சொகுசு கார் வாங்கி பயன்படுத்தும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிவ திருத்தலங்களில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு பக்தர்கள் உண்டியலில் போடும் காணிக்கையாக போடும் பணம், அர்ச்னை, அபிஷேக டிக்கெட் மூலம் என மாதத்திற்கு ரூ.15 லட்சத்திற்கு மேல் வரை வருமானம் கிடைப்பதால் இக்கோயில் சிறப்பு நிலை கோயில் பட்டியலில் உள்ளது. மேலும், துணை ஆணையர் பொறுப்பின் ...