
சென்னை : சென்னை - கூடூர் வழித்தடத்தில் நாயுடுப்பேட்டை - தோரவாரி சத்திரம் இடையே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (28ம் தேதி), 30ம் தேதி மற்றும் ஏப்.2 ஆகிய தேதிகளில் பினாக்கனி உட்பட சில ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.அதன்படி, விஜயவாடா - சென்னை சென்ட்ரல் பினாக்கினி எக்ஸ்பிரஸ் நாளை (28ம் தேதி), நாயுடுப்பேட்டையில் நிறுத்தப்பட்டு 70 நிமிடங்கள் தாமதமாக சென்ட்ரல் வந்து சேரும். இதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து விஜயவாடா பினாக்கினி எக்ஸ்பிரஸ் 40 நிமிடங்கள் தாமதமாக புறப்படும். இதே நாளில், பாடலிபுத்திரம் - ...