
தாம்பரம்: தாம்பரம் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு கையுறை, ஷூ, ஹெல்மெட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததால், தொற்று நோய் அபாயத்தில் பணிபுரிந்து வருகின்றனர். தாம்பரம் நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. இங்கு, தினமும் 100 டன் குப்பைகள் சேகரமாகிறது. இதில் 11வது வார்டு முதல் 27வது வார்டு மற்றும் 10, 32, 35 ஆகிய வார்டுகளில் தனியார் நிறுவனம் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில், 300 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் சாக்கடை சுத்தம் செய்வது, தெருக்களை தூய்மைப்படுத்துவது, வீடுகளிலுள்ள குப்பைகளை சேகரித்து அகற்றுவது ...