
மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தின் உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்கள் ரூ.2,200 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயன்பாட்டுக்கு வந்த 3 ஆண்டுகளில் தொடர்ச்சியாக கண்ணாடி சுவர்கள் உடைந்து விழுவது, கதவுகள் உடைந்து நொறுங்குவது, மேற்கூரை உடைந்து விழுவது, சுவர்களில் பதிக்கப்பட்டுள்ள சலவை கற்கள் பெயர்ந்து விழுவது என விபத்து நடந்து வருகிறது. இதுவரையில் 59 விபத்துக்கள் நடந்துள்ளது. 11 பேர் காயம் அடைந்துள்ளனர். 60வது சம்பவம் இன்று நடந்தது.உள்நாட்டு விமான நிலையத்தின் 2வது தளத்தில் பயணிகள் புறப்பாடு பகுதி உள்ளது. ...