
சென்னை: நக்சலைட்டுகள் வைத்த கண்ணி வெடியில் சிக்கி பலியான சி.ஆர்.பி.எப். எஸ்ஐ குடும்பத்தினருக்கு மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று ஆறுதல் கூறினார். சத்தீஸ்கர் மாநிலத்தில் சி.ஆர்.பி.எப். வீரராகப் பணியாற்றி வந்த சென்னையைச் சேர்ந்த விஜயராஜ் கடந்த வாரம் நக்சலைட்டுகள் வைத்த கண்ணி வெடியில் சிக்கி மரணமடைந்தார். இந்த நிலையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று ெசன்னை அம்பத்தூரில் உள்ள விஜயராஜ் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி, வீர வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்தப் பேட்டி: சத்தீஸ்கர் ...