
சென்னை: “சவுதி அரேபியாவில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்கள் 63 பேரை தாய் நாட்டிற்கு மீட்டுக் கொண்டுவர வேண்டும்” என்று மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சவுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்காக ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடி வேலை செய்து வருகின்றனர். ஆனால் கடந்த பல மாதங்களாக தமிழக மீனவர்களுக்கான சம்பளத்தை அந்த தனியார் நிறுவனம் கொடுக்கவில்லை. மேலும் கடந்த 2 ...