
சென்னை: வரும் 9ம் தேதி முதல் அதிமுக பொதுச் செயலாளருலரும், முதல்வருமான ஜெயலலிதா சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார். முதற்கட்டமாக தாம் போட்டியிடும் ஆர்.கே.நகரில் பிரசாரத்தை துவக்குகிறார். 2வது நாளாக 11ம் தேதி புவனகிரி, விருத்தாசலம் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்ய உள்ளார். ஏப்ரல் 15ல் அருப்புக்கோட்டையிலும், 18ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டதிலும், ஏப்ரல் 23ல் திருச்சியிலும் பிரசாரம் செய்ய உள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டதிலும் ஒரு மைய இடத்திலேயே ஜெயலலிதா தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேச உள்ளார். ...