
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், விலை உயர்வுக்கு வாகன ஓட்டிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.19 காசுகளும், டீசல் விலை 98 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை உயர்ந்ததையடுத்து, பெட்ரோல், டீசல் விலையை எண்ணைய் நிறுவனங்கள் ரூ.2.19 காசுகள் உயர்த்தியுள்ளதால் சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.61.32 காசளவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 98 காசுகளும் உயர்த்துள்ளதால் இனி 1 லிட்டர் 1 லிட்டர் ரூ.50.09 காசுக்கு விற்பனை ஆகிறது. ...