
துரைப்பாக்கம்: நீலாங்கரையில் ரியஸ் எஸ்டேட் அதிபரின் வீட்டை உடைத்து 125 சவரன் நகைகள், பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். தொடர் கொள்ளை சம்பவங்களால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். சென்னை அடுத்த ஈஞ்சம்பாக்கம் அனுமான் காலனி பிரதான சாலையை சேர்ந்தவர் ஸ்டீபன்(38). ரியல் எஸ்டேட் செய்து வருகிறார். இவரது குடும்பத்தினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் உள்ள உறவினரின் வீட்டிற்கு சென்றனர். இதையடுத்து, வீட்டில் ஸ்டீபன் மட்டும் தனியாக இருந்துள்ளார். இதனை மர்ம நபர்கள் நோட்டமிட்டு வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று வழக்கம் ...