
சென்னை: கோடை காலம் துவங்கியதை தொடர்ந்து கடந்த சில வாரங்களாக சென்னையில் வெப்பம் வெகுவாக அதிகரித்துள்ளது. இது போன்ற கடுமையான வெப்பத்திற்கு உலகளாவிய தட்பவெப்ப மாற்றமே காரணம் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள். மே மாதம் துவங்கும் கத்தரி வெயில் ஏதோ தற்போதே துவங்கிவிட்டது போல சூரியன் உக்கிரமாக சுட்டெரித்து வருகிறது. காலை 8 மணி முதலே வெப்பம் அதிகரிப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் திணறுகின்றனர். வரும் நாட்களில் வெப்பத்தின் அளவு இன்னும் கடுமையாக அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் செய்வதறியாது திகைக்கின்றனர். வெயிலின் தாக்கம் அதிகமாக ...