Quantcast
Viewing latest article 6
Browse Latest Browse All 120575

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு அபராதத் தொகையாக சுமார் ரூ.3 கோடி வசூல்..!!

Image may be NSFW.
Clik here to view.

சென்னை: சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு அபராதத் தொகையாக சுமார் ரூ.3 கோடி வசூலிக்கப்பட்டது. மோட்டர் வாகன சட்டத்தை திறம்பட அமல்படுத்துவதன் மூலமும், விழிப்புணர்வு பிரச்சாரங்களை ஏற்பாடு செய்வதன் மூலமும் சாலை போக்குவரத்து விபத்துக்களில் ஏற்படும் விபத்து மற்றும் இறப்பு விகிதத்தை குறைக்க சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் கடுமையான முயற்சிகளை எடுத்து வருகின்றனர். சென்னை பெரு நகரத்தில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக சராசரியாக 6000க்கும் மேற்பட்ட வழக்குகள் தினசரி பதிவு செய்யப்படுகின்றன. இருப்பினும் சில விதிமீறல் செய்பவர்கள் அபராதத் தொகையை சரியான நேரத்தில் செலுத்துவதில்லை. எனவே 11/04/2022 அன்று பெருநகரத்தில் 10 அழைப்பு மையங்களை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் விதிமீறி அபராதம் செலுத்தாதவர்களை தொலைபேசியின் மூலம்  அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு மூலம் உரிய பதில் கிடைக்காததால் கடந்த 29.03.2023, 31.03.2023 மற்றும் 01.04.2023 ஆகிய மூன்று நாட்கள் 156 இடங்களில் திடீர் வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 143 வழக்குகள் உட்பட 10809 வழக்குகள் தீர்வு காணப்பட்டு இணையதளம் வாயிலாக  ரூ. 60,03,490/- அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டது. மேலும் போக்குவரத்து விதிமீறுபவர்களில் ஈடுபடுபவர்கள் தங்களுக்கு கீழ் நிலுவையில் உள்ள வழக்குகளின் அபராதத் தொகையினை (கிரெடிட்/டெபிட் கார்டு, க்யூஆர் குறியீடு அல்லது ஆன்லைன் பேமெண்ட்) அபராதத்தைச் செலுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடந்த மூன்று மாதங்களில் நிலுவையில் இருந்து சுமார் 77,767 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு சுமார் ரூ.3,10,32,200/- அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது. பொதுமக்கள் இது ஒரு துன்புறுத்தல் என்று பாராமல், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக நிலுவையில் உள்ள வழக்குகளின் அபராதத் தொகையை  செலுத்துவதற்கான விழிப்புணர்வு என்பதை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். எதிர்காலத்திலும் இதே போன்ற நடவடிக்கைகள்  தொடரும்.


Viewing latest article 6
Browse Latest Browse All 120575

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>