
திமுக தேர்தல் அறிக்கை முழு விவரம் வருமாறு: கிராமப்புறப் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்திட வேளாண்மை, கிராம மக்களின் நல்வாழ்வு, கிராமக் கைத்தொழில் வளர்ச்சி, கிராமங்களிலேயே அடிப்படைக் கல்வி பெறும் வசதி, கிராமப்புற உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அந்த வகையில் வேளாண் விளைபொருள்கள், கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருள்கள், கைத்தறித் துணி வகைகள், காய்கனி உள்ளிட்ட தோட்டக்கலை விளைபொருள்கள் ஆகியவற்றிற்குக் கட்டுப்படியாகக் கூடிய, உரிய நியாயமான விலை கிடைக்கக் கூடிய வகையில் சந்தைப்படுத்துதல், நீர் ...