
சென்னை: கேரளாவில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 110 பேர் பலியான சம்பவத்திற்கு தமிழக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக கவர்னர் ரோசய்யா : கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், பராவூர் கோவிலில் ஏற்பட்ட தீவிபத்தில், ஏராளமானோர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் கேள்விபட்டு அதிர்ச்சியடைந்தேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். முதல்வர் ஜெயலலிதா: இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த தருணத்தில் எந்த ...