
அனகாபுத்தூர்: வருங்கால வைப்பு நிதி, சேமநல நிதி வழங்காததை கண்டித்து அனகாபுத்தூர் நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அனகாபுத்தூர் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு, தினசரி சேகரிக்கப்படும் 20 டன் குப்பையை அகற்ற நகராட்சியில் போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லாததால், தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் குப்பையை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் பணியாற்றும் 140 தொழிலாளர்களுக்கு வைப்புநிதி, சேமநல நிதி இதுவரை வழங்கப்படவில்லை. இதுபற்றி பலமுறை நிறுவனத்தில் கேட்டபோதும் எந்த ...