
சென்னை: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மணிமுத்தாறு பகுதியை சேர்ந்தவர் ரஹிம் (49). கடந்த சில காலமாக ரஹிம், துபாயில் வேலை பார்த்து வந்தார். தற்போது விடுமுறையில் சொந்த ஊர் திரும்ப முடிவு செய்தார். இதையடுத்து, நேற்று மதியம் 2 மணிக்கு விமானம் மூலம் அவர் சென்னை வந்தார். விமானத்தில் சோதனை முடிந்து உடமைகளை டிராலியில் வைத்து வெளியே போர்டிகோ பகுதிக்கு நடந்து சென்றார். அப்போது, ரஹிம் மயங்கி விழுந்தார். சக பயணிகள் அவர் மயங்கி விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விமான நிலைய அதிகாரிகளும், விமான நிலைய ...