
சென்னை: உலக புவி தினத்தை முன்னிட்டு தெற்கு ரயில்வே, அகரம் அறக்கட்டளையின் யாதும் ஊரே, நாககூடல் பூவிதம் உட்பட பல்வேறு அமைப்புகள் இணைந்து சென்னை சென்ட்ரல் ரயில்நிலைய சுவர்களை ஓவியங்கள் மூலம் அழகுப்படுத்தும் பணியில் நேற்று ஈடுபட்டன. சென்ட்ரல் ரயில்நிலைய ஒன்றாவது நடைமேடையில் உள்ள சுவரில் 500 அடி நீளத்துக்கு ஓவியங்கள் வரையும் பணி நேற்று தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் நடிகரும் ஓவியருமான சிவகுமார், சென்னை ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் மோகன்ராஜா, ரயில்நிலைய மேலாளர் உமாசங்கர், ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சஞ்சய்யா ஆகியோர் ...