
சென்னை: வெயிலின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 12 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. உச்சகட்டமாக வேலூரில் 110 டிகிரி பதிவானது. வெயில் கொடுமையால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். வெயிலின் உச்சகட்டம் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் வருகிற 4ம் தேதி தொடங்க உள்ளது. இந்த காலகட்டத்தில்தான் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். ஆனால், தமிழகத்தில் வேலூர், சேலம், கரூர், தர்மபுரி, மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 15 நாட்களாக வெயில் வாட்டி வதைத்து ...