
சென்னை: இந்தியாவில் உள்ள பாரம்பரிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதி கே.என்.பாஷா பேசினார். அறிவுசார் சொத்துரிமை வக்கீல்கள் சங்கம் சார்பில் 6வது உலக அறிவுசார் சொத்துரிமை தினம் சென்னையில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அறிவுசார் சொத்துரிமை மேல் முறையீட்டு வாரியத்தின் தலைவர் நீதிபதி கே.என்.பாஷா, அறிவுசார் சொத்துரிமை வக்கீல்கள் சங்க தலைவர் பி.சஞ்சய் காந்தி, ராணிமேரி கல்லூரி முதல்வர் அக்தர்பேகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சியில் நீதிபதி கே.என்.பாஷா பேசியதாவது: இந்தியாவின் ...