
சென்னை : அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் சுரேஷ் கர்ணா (ஜி.கே.எஸ்.) தொகுதி முழுவதும் தினசரி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, நேற்று 108வது வட்டத்தில் ரசாக் கார்டன் மெயின் ரோடு, விநாயகர் கோயில் தெரு, காந்தி தெரு, பட்டேல் தெரு, அய்யா காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். வணிக நிறுவனங்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகளிடமும் தாமரைக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார். பிரதமர் நரேந்திரமோடி நிறைவேற்றிய திட்டங்கள் பற்றிய துண்டு பிரசுரங்களை வினியோகித்து வாக்கு கேட்டார். ...