
சென்னை : தேமுதிக வேட்பாளர்கள் வந்த கார் மீது, தண்ணீர் லாரி இரண்டு முறை மோதிய சம்பவம் தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி தேமுதிக வேட்பாளராக அரிகிருஷ்ணன் (46) மற்றொரு தொகுதியான ஜோலார்பேட்டை தேமுதிக வேட்பாளராக பயஸ் பாட்சா (48) ஆகியோர் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்கள் தங்களின் நண்பர்களுடன் ஒரே காரில் நேற்று காலை திருப்பத்தூரிலிருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் நோக்கி வந்துகொண்டிருந்தனர். இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் பணிமணை திறப்பது குறித்து விவாதிக்கவும், அதற்காக ...