
சென்னை : காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி தேமுதிக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. இதில் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தேமுதிக மாநில இளைஞர் அணி தலைவர் எல்.கே.சுதீஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர், தேமுதிக வேட்பாளர் ஏகாம்பரத்தை ஆதரித்து வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரித்துவிட்டு அவர் சென்ற சிறிது நேரத்தில், தகவல் அறிந்து வந்த பறக்கும்படை அதிகாரி மீனா தலைமையிலான அதிகாரிகள், தேர்தல் அலுவலகம் திறக்க அனுமதி உள்ளதா? என கேட்டார். உரிய அனுமதி இல்லாததால் ...