
சென்னை: மதுரவாயல் திமுக-காங்கிரஸ் கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.ராஜேஷை ஆதரித்து, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு நேற்று ராமாபுரம், வளசரவாக்கம், செட்டியார் அகரம், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். வளசரவாக்கத்தில் அவர் பேசியதாவது:சென்னையில் பயங்கர வெள்ளம் வந்தபோது முதல்வர் ஜெயலலிதா தன் சொந்த தொகுதியான ஆர்.கே.நகருக்கு காரில் மக்களை சந்திக்க சென்றார். வண்டியில் இருந்து கீழே இறங்காமல், வண்டி கண்ணாடியை கூட இறக்கிவிடாமல் வெள்ள சேதத்தை ஜெயலலிதா பார்வையிட்டார். வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் ரூ.5 ஆயிரம் கூட முறையாக ...