
சென்னை: மயிலாப்பூரில் கார், பைக் மோதிய விபத்தில் வாலிபர்கள் 2 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். நுங்கம்பாக்கம் புஸ்பா நகரை சேர்ந்தவர் சூரிய பிரகாஷ் (19). இவரது நண்பர் பிரசாத் குமார் (19). இவர்கள் நேற்று முன்தினம் பைக்கில் மெரினா சென்றனர். பின்னர், வீடு திரும்ப மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை அருகே வி.எம் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் மின்னல் வேகத்தில் பைக் மீது மோதியது. இதில், சூரிய பிரகாஷ், பிரசாத் குமார் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ ...