
தண்டையார்பேட்டை: சவுகார்பேட்டை காளத்தி பிள்ளை தெருவை சேர்ந்தவர் ேமாதிலால் (48), ஸ்டீல் மொத்த வியாபாரி. காளத்தி பிள்ளை தெருவில் உள்ள காம்ப்ளக்ஸ் ஒன்றின் தரை தளத்தில் பாத்திர கடை நடத்தி வருகிறார். இங்கு 10க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் கடை மூடப்பட்டிருந்தது. இரவு 10 மணியளவில் திடீரென கடையில் தீப்பிடித்து எரிந்தது. இதில் மளமளவென பரவிய தீ குடோனுக்கும் பரவியது.தகவல் அறிந்து பேசின்பிரிட்ஜ், எஸ்பிளனேடு, ஐகோர்ட் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அதற்குள், கட்டிடத்தின் 4வது மாடியில் ...