
திருவொற்றியூர்: முதியோர் ஓய்வூதியம் கிடைக்காதவர்களுக்கு ஊதியம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் அரசிடம் இருந்து எதிர்பார்க்கின்றனர். திருவொற்றியூர் மற்றும் மாதவரம் தாலுகாவுக்கு உட்பட்ட பல பகுதிகளில் தமிழக அரசின் முதியோர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இவர்களில் பலருக்கு முதியோர் ஓய்வூதியம் வரவில்லை. இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் மக்களை தேடி வருவாய்த் துறை திட்ட முகாம் பல இடங்களில் நடைபெற்றது. அப்போது முதியோர் ஓய்வூதியம் தொகை கிடைக்காதவர்களும், புதிதாக முதியோர் ஓய்வூதியம் கேட்டும் பலர் ...