
சென்னை : தமிழகத்தில் 17 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: சேலம் கலெக்டராக பணியாற்றி வந்த கார்த்திகேயனுக்குப் பதிலாக வி.சம்பத் சேலம் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். தேனி கலெக்டராக பணியாற்றி வந்த எஸ்.நாகராஜன் மாற்றப்பட்டு அந்த பதவிக்கு என்.வெங்கடாச்சலம் நியமிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் கலெக்டராக பணியாற்றி வந்த சத்யபிரதா சாகு மாற்றப்பட்டு அந்த பதவிக்கு டி.என்.ஹரிகரன் நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் கலெக்டராக பணியாற்றி வந்த ராஜேந்திர ரத்னூ ...