
வேளச்சேரி: தமிழக அரசு நெடுஞ்சாலைத் துறை சார்பில் தரமணி நூறடி சாலை - பெருங்குடி சாலை சந்திப்பில் நடை மேம்பாலம் கட்டப்பட்டது. கடந்த 2014ம் ஆண்டு, ஜூன் 12ம் தேதி காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா இதை திறந்து வைத்தார். அதன்பிறகு இந்த மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில், இந்த மேம்பாலத்தில் குடிபோதையில் குடிமகன்கள் அரை நிர்வாணத்தோடு மயங்கிக் கிடக்கின்றனர். இதனால் இவ்வழியே செல்லும் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் முகம் சுளிப்பதுடன், அச்சத்துடன் செல்கின்றனர். மேலும் இரவு நேரங்களில் நடைமேம்பாலத்தில் அமர்ந்து மது அருந்தும் ...