
சென்னை : அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளுடன் திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார். இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 232 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் எந்தெந்த வாக்குப்பதிவு மையங்களில் குறைந்த அளவு வாக்குகள் பதிவாகியுள்ளது என்று ஆய்வு செய்யப்படும். இப்படி குறைவான வாக்குப்பதிவு ...