
சென்னை : இந்த ஆண்டு இன்ஜினியரிங் படிப்புக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ள நிலையில், இதுவரை 2,48,760 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஜூன் 2வது வாரத்தில் ரேண்டம் எண் வெளியிட அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 538 இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த ஆண்டு (2016-17) இன்ஜினியர் படிப்புக்கு கடந்த ஏப்ரல் 15ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. வழக்கமாக, சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மூலம் அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் வழங்கப்படும். இந்த ஆண்டு முதல்முறையாக மாணவர்கள் சிரமத்தை போக்கும் வகையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் ...