
சென்னை : போக்குவரத்து கூட்டுறவு சங்கத்தில் ஊழல் புகார் எழுந்ததை தொடர்ந்து, அந்த சங்கம் தற்போது கலைக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியின் அண்ணா தொழிற்சங்க நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் போக்குவரத்து கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கம் (எக்ஸ் 367) கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இது, தேர்ந்தெடுக்கப்பட்ட 11 இயக்குனர்கள், அலுவலக பணியாளர்களை கொண்டு இயங்குகிறது. இதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு போக்குவரத்து கழகத்தில் ...