
சென்னை: தி.நகர் சுரங்கபாலம் பகுதியில் உள்ள இணைப்பு பாலம் இடிந்து விழுந்ததில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னை தி.நகரில் எப்போதும் பரபரப்பாக இருக்கக்கூடிய பகுதியில் துரைசாமி சுரங்க பாலம் உள்ளது. இந்த பாலத்தின் குறுக்கே பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் இணைப்பு பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இது, நீண்ட காலமாக பராமரிப்பில்லாமல் இருந்ததால் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சம் அப்பகுதி மக்கள் மத்தியில் நிலவியது.இந்நிலையில், இந்த இணைப்பு பாலத்தை மட்டும் அகற்றிவிட்டு புதிதாக கட்டுவதற்கான பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டது. அதன்படி, புதிதாக ...