
சென்னை: தமிழகத்தில் தன்னிச்சையாக பால் விலை உயர்த்துவதை தடுக்க தனியார் பால் நிறுவனங்களின் பால் விலையையும் தமிழக அரசே நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வரிடம் பால் முகவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமி, பொதுச்செயலாளர் கமாலுதீன், பொருளாளர் பொன் மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வரின் புகார் பிரிவு மற்றும் பால்வளத்துறை அமைச்சரிடம் நேற்று அளித்த மனுவில் கூறி இருப்பதாவது: ஆவின் நிறுவனம் கொள்முதல் மற்றும் விற்பனை ...