
சென்னை : தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக 106 டிகிரி வெயில் கொளுத்தி வருகிறது. கத்திரி வெயில் முடிந்துள்ள நிலையில், சில இடங்களில் வெப்ப சலனம் ஏற்பட்டு தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரியில் அதிகபட்சமாக 40 மிமீ மழை பெய்துள்ளது. இருப்பினும் படிப்படியாக வெயிலின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது. அதிகபட்சமாக சென்னை, புதுச்சேரி, திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது. கடலூர், மதுரை, நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டையில் 100.5 டிகிரி வெயில் கொளுத்தியது. வெயிலின் தாக்கம் குறைந்தாலும் சில இடங்களில் அனல் காற்றும் ...