
சென்னை : கேரள முதல்வராக பொறுப்பேற்றுள்ள பினராய் விஜயனுக்கு வாழ்த்து தெரிவித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: கேரள மாநில சட்டப்பேரவைக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து, நீங்கள் கேரளாவின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ளதற்கு எனது பாராட்டுக்களை ெதரிவித்துக் கொள்கிறேன். உங்கள் சீரிய தலைமையில் கேரள மாநிலம் வளர்ச்சியும், செழுமையும் பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் ...