
சென்னை : மாநிலம் முழுவதும் 24 ஆயிரத்து 472 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து வருவதாக போக்குவரத்து ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்தார். கோடைகால விடுமுறை முடிந்து, பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது. பள்ளி வாகனங்களை அதற்கு முன்பு சோதனை செய்ய வேண்டும் என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். சென்னையில், கடந்த 28ம் தேதி கொட்டிவாக்கம் நெல்லை நாடார் மேல்நிலைப்பள்ளியில் வாகனங்கள் ஆய்வு நடந்தது. இதையடுத்து நேற்று 11 பள்ளிகளை சேர்ந்த மொத்தம் 72 பள்ளி வாகனங்கள் எம்ஆர்சி நகர் செட்டிநாடு வித்தியாஸரமம் பள்ளி வளாகத்தில் ஆய்வு ...