
* ஐஸ் பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனம் இல்லாமல் தவிப்புசென்னை: ஆயிரக்கணக்கான மீனவர்களால் ஐஸ் பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனத்துக்காக கட்டப்பட்ட ரூ.2.5 கோடி பணம் வங்கியில் வீணாக முடங்கி உள்ளது. இதனால் மீனவர்கள் தவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். இவர்களின் நலன் கருதி ஐஸ் பெட்டியுடன் கூடிய இரு சக்கர வாகனங்கள் மத்திய அரசு பங்களிப்புடன் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, தனியார் இரு சக்கர வாகன நிறுவனத்துடன் அரசு சார்பில் ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தப்படி மத்திய அரசின் மானியம் ரூ.3,500, பயனாளிகளான ...