
சென்னை: முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமை செயலகம் வந்து, பொதுப்பணித்துறை, கால்நடை, மீன்வளம், பால்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நடைபெற்ற 10க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தும், வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கியும் வைத்தார். மகளிர் சுய உதவி குழுவினருக்கான அம்மா கைபேசி திட்டம், பசுமை வீடுகள் திட்டம், அரசு ஊழியர்கள் குடியிருப்பு மற்றும் பல அரசு கட்டிடங்களை அவர் திறந்து வைத்தார். மேலும், 5 ஆண்டு ஆட்சி முடிவடையும் நேரத்தில் அவசர அவசரமாக ரூ.747 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு ஜெயலலிதா நேற்று அடிக்கல் நாட்டியுள்ளது ...