
தண்டையார்பேட்டை: ரம்ஜான் பண்டிகையை ஒட்டி திருச்செந்தூர் தொகுதி, உடன்குடி ஒன்றியம், காலன் குடியிருப்பு, இம்மா பள்ளி நிர்வாக நல்வாழ்வு சங்கம் சார்பில் ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ராயபுரத்தில் நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு உசேன் தலைமை வகித்தார். திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், நசீம் ஐஏஎஸ், மனிதநேய மக்கள் கட்சி முன்னணி தலைவர் ஜவாஹிருல்லா, ஏ.டி.மணி மற்றும் சங்க நிர்வாகிகள் தமீம் ரகுமான், மொய்தீன் உள்ளிட்ட ஏராளமானோர் ...