
சென்னை: ஓடும் ரயிலில் ஏற முயன்ற வாலிபர், தவறி விழுந்ததில் ரயிலில் சிக்கி 2 கால்களும் துண்டாகி பரிதாபமாக பலியானார். இந்த விபத்தால் திருத்தணி ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை சென்ட்ரலில் இருந்து நேற்று காலை 10 மணிக்கு நெல்லூர் விரைவு ரயில் புறப்பட்டது. மதியம் 12 மணிக்கு திருத்தணி ரயில் நிலையம் வந்து, சிறிது நேரத்தில் புறப்பட்டது. அப்போது ஒரு வாலிபர் ஓடி வந்து ரயிலில் ஏறினார். நிலைதடுமாறி தண்டவாளத்தில் விழுந்ததில் அவரது இரண்டு கால்களும் துண்டாகி ரத்த வெள்ளத்தில் துடித்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக பயணிகள், உடனே ...