
திருவொற்றியூர்: திருவொற்றியூர் தேரடி தெரு அருகே மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் மாநகராட்சியின் இ சேவை மையம், மற்றும் தனியார் மருத்துவமனை உள்ளிட்ட 34 அலுவலகங்கள் செயல்படுகின்றன. துணிக் கடை உள்ளிட்டவைகளும் இருக்கின்றன. இந்த வணிக வளாகம் திருவொற்றியூர் நகராட்சியாக இருக்கும்போது கட்டப்பட்டது. இந்நிலையில், சரியான பராமரிப்பு இல்லாததால் இந்த வணிக வளாகம் பழுதடைந்து காணப்படுகிறது. எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற அபாய நிலை நிலவியது. பொதுமக்கள் அதிகமாக வந்துச்செல்லக்கூடிய இந்த வணிக வளாகத்தை சீரமைக்கக் ...