
* பணிகள் பாதியில் நிறுத்தம் * பொதுமக்கள் அதிர்ச்சிசென்னை: சென்னை மாநகராட்சி 25வது வார்டில் அம்மா உணவகம் கட்டுவதற்கு ஆளும்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது, அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாநகராட்சி 25வது வார்டுக்கு உட்பட்ட கதிர்வேடு, எம்ஜிஆர் நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா உள்ளது. இங்கு, அம்மா உணவகம் கட்டுவதற்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு முடிவு செய்யப்பட்டது. ஆனால், பூங்காவில் அம்மா உணவகம் கட்டுவதால் நடைபயிற்சி மேற்கொள்வதற்கும், சிறுவர்கள் ...