
சென்னை : நாடு முழுவதும் நேற்று நடந்த வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் 80 ஆயிரம் வங்கிக் கிளைகளில் இருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வங்கி சேவை முற்றிலும் முடங்கியதால், பொதுமக்கள் வங்கியிலிருந்து பணம் எடுக்க முடியாமலும், போட முடியாமலும் கடும் அவதிக்குள்ளாகினர். நாடு முழுவதும் ரூ.19 ஆயிரம் கோடி மதிப்புள்ள 26 லட்சம் காசோலைகள் முடங்கின. “ பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை நிறுத்த வேண்டும், வங்கி சீர்திருத்தம் என்ற பெயரில் பொதுத்துறை வங்கிகள் மீது திணிக்கும் கொள்கைகளை கைவிட வேண்டும் “ உள்ளிட்ட கோரிக்கைகளை ...