
சென்னை : தமிழ்நாடு இசை பல்கலைக்கழகத்தை சூறையாடி விட்டு பெண் துணை வேந்தருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனக்கு கொடுக்க வேண்டிய தங்கப்பதக்கத்தை வேறு ஒரு மாணவனுக்கு கொடுத்ததால் ஆத்திரத்தில் அலுவலகத்தை சூறையாடியதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை, கிரீன்வேஸ் சாலையில், தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலை கழகம் உள்ளது. இதன் துணைவேந்தராக பிரபல வீணை கலைஞர் வீணை காயத்ரி இருந்து வருகிறார். இந்நிலையில், பல்கலைக் கழக ஊழியர்கள் கடந்த 25ம் தேதி காலை வழக்கம்போல் பணிக்கு வந்தனர். அப்போது, பல்கலைக் கழகத்தில் ...