
சென்னை: நேபாளத்துக்கு ஆன்மிக சுற்றுலா சென்றபோது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சென்னை, காஞ்சிபுரம், வேலூரை சேர்ந்த 10 தமிழர்கள் சிக்கினர். மோசமான வானிலை காரணமாக இவர்களை மீட்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், உடன் சென்ற 7 பேர் நேற்று சென்னை புறப்பட்டனர். காஞ்சிபுரம் திருக்காலிமேட்டு பகுதியை சேர்ந்த கோபி (41), உறவினர்கள் மற்றும் நண்பர்களான சென்னை அமைந்தகரை பத்மநாபன் (41), துளசி (48), காஞ்சிபுரம் ராமலிங்கம் (45), குமாரி (43), ஜெயலட்சுமி (57), சங்கரி (34), செல்லம்மாள் (55) மற்றும் வேலூர் குடியாத்தம் சுகுணா (42), கலவை மகேஸ்வரி (35), ...